காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி - எம்எல்ஏ சுந்தர்

X
புகார் தெரிவிக்க எம்எல்ஏ சுந்தர் வெப்சைட்டை உருவாக்கினார்.
By - S.Baskaran, Reporter |20 Jun 2021 11:45 AM IST
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார் மற்றும் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மின்னஞ்சல் மற்றும் செயலியை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அறிமுகப்படுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயல்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் , உத்திரமேரூர் , மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் இன்று வெளியிட்ட செய்தியில் , தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மற்றும் கருத்துக்களை கீழ்க்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்யலாம் எனவும் அல்லது mail@ksundar.com மின்னஞ்சல் https://www.ksundar.com/request மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu