நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ சுந்தர்
காவந்தண்டலம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரால் திறக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையம்.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் அமைக்கபட்டுள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.
ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணவாரி பருவத்தில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளால் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை காலம் வந்துள்ளதால், கொள்முதல் செய்ய தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அரசு ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை துவக்கியது. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலைய பணியினை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து காவந்தண்டலம். மற்றும் மேல்பேரமநல்லூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். கடந்த பருவத்தில் 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டது கூறிப்பிடத்தக்கது.
அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு பணம் அளித்தது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் இந்த பருவ கொள்முதலையும் முறைகேடின்றி மேற்கொள்ள ஊழியர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யப்பிரியா இளமதி, ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன் , ஒன்றிய செயலாளர் குமணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாவிஜயகுமார், கமலக்கண்ணன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அசோகன், திமுக நிர்வாகிகள் ராஜகோபால், தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசு, ஓம்சக்திவரதன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu