சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை

சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை
X

 நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் தென்னேரி N.M.வரதராஜுலு தலைமையில் 4 கிராம விவசாயிகள் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடை துவங்க உள்ளதால் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் மாவட்டம் என அழைக்கப் படுவதுண்டு. கடந்த பருவங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்70க்கும் மேற்பட்ட‌ அரசு கொள்முதல் நிலையங்களில் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தற்போது வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது.

மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சமேடு, கட்டவாக்கம் , அகரம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட உள்ளது.

தென்னேரி பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் விரைவாக அமைத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என கோரி 4 கிராம விவசாய பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ஏற்கனவே அப்பகுதியில் நடைமுறையில் உள்ளதால் சிக்கல் இல்லை எனும் விரைவில் துவங்க பரிந்துரைப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!