உத்திரமேரூரில் கலெக்டருக்கு அல்வா கொடுக்க நினைத்த அதிகாரிகள், வசமாக சிக்கிய சம்பவம்

உத்திரமேரூரில் கலெக்டருக்கு அல்வா கொடுக்க நினைத்த அதிகாரிகள், வசமாக சிக்கிய சம்பவம்
X

உத்திரமேரூர் மானம்பதி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

மானம்பதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்வது போல் நாடகம் ஆடிய அதிகாரிகள் கலெக்டரிடம் வசமாக சிக்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் விவசாய பகுதியாக விளங்குவது உத்திரமேரூர். இங்குள்ள ஏரி நிரம்பி பாசனம் பெற்றால் முப்போகமும் 54கிராமங்கள் பயன்பெறும் .

சுமார் 8ஆயிரம் ஏக்கர் பயிரிடப்படும் நெல் உள்ளிட்டவைகளை வேடபாளையம் தொகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படும்.

தற்போது கடந்த பருவத்தில் அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தது.

இதற்கென பல கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்கவும் இதுபோல் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை இங்கு இருப்பு வைப்பர்,

அதற்கேற்ற பணத்தைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வரும்போது அதை விற்பனை செய்வது அதற்கு கட்டணம் செலுத்தி வந்தனர்.

இந்த சொர்ணவாரி பருவத்திற்கு இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ஆட்சியர் எம்.ஆர்த்தி உத்திரமேரூர் அடுத்த மானம்பதி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல பணிகளை ஆய்வு மேற்கொண்டு அவ்வழியாக வந்த போது இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்தார்.

இங்கு இதுவரை நெல் கொள்முதல் செய்யாத நிலையில், அருகிலிருந்த நெல் அரவை நிலையத்திலிருந்து எடை மற்றும் நெல் தூற்றும் இயந்திரம் அனைத்தையும் வாகனத்தில் ஏற்றி வந்து, ஆட்சியருக்காக நெலகொள்முதல் செய்வது போல் நாடகம் நடத்தி அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அளித்தனர்.

மதியம் 12 மணி வரை எந்த ஒரு விவசாயியும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரவில்லை, இங்கு நெல்கொள்முதல் செய்யவில்லையே என ஆட்சியர் கேட்டபோது,

தாங்கள் வருவதால்தான் இன்று எந்த விவசாயிடமும் நெல்லை பெறவில்லை என மண்டல மேலாளர் தெரிவித்தது ஆட்சியருக்கு அதிருப்தி அளித்தது.

மேலும் எந்த ஒரு ஊழியரும் முறையான ஆவணங்களை காட்டாதது ஆட்சியருக்கு அதிர்ச்சியளித்தது. ஆட்சியர் ஆய்வு முடித்து கிளம்பியதும் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் அரவை தொழிற்சாலைக்கு திரும்பி சென்றனர்.

Tags

Next Story