காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 2.68 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு.. அமைச்சர்கள் பங்கேற்பு...
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், அன்பரசன் ஆகியோர் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 2.68 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களான துணை சுகாதார நிலையங்கள், புற நோயாளி பிரிவு கட்டிடங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டிடம், சித்தா பிரிவு கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டு பொதுமக்கள் பயனுக்காக இன்று குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது நம் முன்னோர்கள் பொன்மொழி. அந்த நோயற்ற வாழ்வை அனைவருக்கும் வழங்கிட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்கபட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 201 வட்டார, நகர, துணை சுகாதார நிலையங்கள், 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ரூ.2.68 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மக்களின் ஆரோக்கித்திற்காகவும், வாழ்விற்காகவும் வருமுன் காப்போம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, இளம் சிறார் இருதய காப்பீட்டு திட்டம், மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் 48 திட்டம், பள்ளி சிறார் நலத்திட்டம், மகப்பேறு திட்டங்கள் ஆகிய எண்ணற்ற மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டு வருகின்றன.
மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 63 ஆயிரத்து 765 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, அதில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 311 நபர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பிசியோதெரபி, நோய் தடுப்பு சிகிச்சை ஆகியவற்றுக்கான மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 ஆயிரத்து 709 கர்ப்பினி தாய்மார்களுக்கு, ரூ.15 கோடியே 83 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் நிதி உதவியும், தாய் சேய் நல பரிசு பெட்டகம், ஜன்னி சுரக்ஷா யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் ஆரம்ப சுகதார நிலையங்களில் குழந்தை பிரசவித்த 23 ஆயிரத்து 53 தாய்மார்களுக்கு பரிசு பெட்டகமும், நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மருத்துவ மற்றும் பொது சுகாதார இயக்குநர் டாக்டர். செல்வவிநாயகம், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu