காஞ்சிபுரத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள், போக்குவரத்து சேவை துவங்கியது.

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள், போக்குவரத்து சேவை துவங்கியது.
X
தமிழக முதல்வரின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு பின் காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்கப்பட்டன, பேருந்து போக்குவரத்து துவங்கியது

கடந்த 10ஆம் தேதி முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இருவார ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால், தமிழக முதல்வர் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி அதில் ஊரடங்கு மேலும் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கு முன்பு இன்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கும் எனவும் பொதுமக்கள் வெளியூர்களில் சிக்கியிருக்கும் அவர்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்.

அறிவிப்பு வெளியானதும் வியாபாரிகள் உடனடியாக கடையை திறந்தனர். டீ கடை மளிகை பொருட்கள் கடை பழக்கடை என அனைத்தும் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உடனடியாக திறக்கப்பட்டது.

அதேபோல் காஞ்சியில் சிக்கியிருந்த பொதுமக்கள் உடனடியாக பேருந்து நிலையத்திற்கு வந்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் சென்னைக்கு முதல் பேருந்தை இயக்கி அதில் சில பயணிகள் பயணித்தனர்.

ஊரடங்கு தளர்வு காரணமாக வீட்டில் இருந்த அனைவரும் தற்போது தொடர் தளர்வில் ஊரடங்கை முன்னிட்டு பொருட்களை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!