கோபி சிறையில் இருந்து பெயிலில் வந்த வாலிபருக்கு மீண்டும் ஜெயில்

கோபி சிறையில் இருந்து பெயிலில்  வந்த வாலிபருக்கு    மீண்டும் ஜெயில்
X

மணிகண்டன்.

ஈரோடு மாவட்டம் கோபி சிறையில் இருந்து வெளியே வந்த வாலிபரை வேறு ஒரு வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

கோபி சிறையில் இருந்து வெளியே வந்த வாலிபரை வேறு ஒரு வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

ஈரோடு சோலார் பகுதியை சேர்ந்தவர் நரி என்கிற மணிகண்டன் (வயது 24). இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கூறி, கடந்த மே மாதம் கோவை மாவட்டம் சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக சிறையில் இருந்த மணிகண்டன் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரை அழைத்து செல்வதற்காக சிறை வாசலில் அவரது தாய் சுமதி காத்திருந்தார். அப்போது, வேறு ஒரு வழக்கில் மணிகண்டனை கைது செய்வதற்காக, சரவணம்பட்டி தனிப்படை போலீசாரும் காத்திருந்தனர்.

இதனையடுத்து, வெளியே வந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் மீண்டும் கைது செய்து காரில் ஏற்றினர். அப்போது, மகனுடன் காரில் ஏற முயன்ற போது சுமதியின் காலில் கார் சக்கரம் ஏறியதாக தெரிகிறது.

இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!