கள்ளிப்பட்டி அருகே மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

கள்ளிப்பட்டி அருகே மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு
X

பைல் படம்

கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சங்கமங்கலத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது51). இவரது இருமகன்கள் மற்றும் இருமகள்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கணக்கம்பாளையம் நேரு தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், மூத்த மகன் பாலமுருகனுக்கு (22) நேற்று காலை உடல்நலம் சரியில்லாமல் போகவே, மற்ற மூன்று பேரும் வேலை சென்று விட்டனர்.

பின்னர், வேலை முடிந்து மாலை மூன்று பேரும் அறையில் வந்து பார்த்தபோது, பாலமுருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாலமுருகனை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், பாலமுருகனின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது