ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய இளைஞர் கைது

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட ராமசந்திரன்.

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Erode News, Erode Today News - ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரி பட்டேல் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 36). பெங்களூரு கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று காலை சிவகிரியில் இருந்து ஈரோட்டிற்கு தனியார் நகர பேருந்தில் வந்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில், செல்போன், ஐபேடு ஆகியவை வைத்திருந்தார். பின்னர், இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொடுமுடி கறிக்கடை வீதியை சேர்ந்த ரங்கராவின் மகன் ராமசந்திரன் (வயது 20) என்பவர் ஓடும் பேருந்தில் இருந்து அந்த பையை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ராமசந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போன், ஐபேடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், ராமசந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!