பெருந்துறையில் 19 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல்: வாலிபர் கைது..!

பெருந்துறையில் 19 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல்: வாலிபர் கைது..!
X

கைது செய்யப்பட்ட திலீப்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 19 வயது பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Erode News, Erode Today News, Erode Live Updates - பெருந்துறை அருகே 19 வயது பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (வயது 19). இவர், கடந்த 12ம் தேதி காலை அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் சத்தம் போடவே திலீப் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து அந்த பெண் பெற்றோரிடம் தெரிவிக்கவே, திலீப்பை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை மீண்டும் அதே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் திலீப்பை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்றைய இளைஞர் சமூகம் எங்கு செல்கிறோம் என்பதை அறியாமல் தவறான பாதைகளில் செல்கின்றனர். இதைப்போன்ற இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம்.

Tags

Next Story
ai futures trading software