அந்தியூரில் போதை ஊசி விற்ற வழக்கு: மூன்று முறை தப்பி ஓடிய வாலிபர் கைது

அந்தியூரில் போதை ஊசி விற்ற வழக்கு: மூன்று முறை தப்பி ஓடிய வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட பாலாஜி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை ஊசி விற்ற வழக்கில், 3 முறை தப்பி ஓடி தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே போதை ஊசி விற்ற வழக்கில், 3 முறை தப்பி ஓடி தலைமறைவாக இருந்த வாலிபரை சனிக்கிழமை (நேற்று) போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி சிந்தகவுண்டம்பாளையத்தில் ஒரு வாலிபர் போதை ஊசி வாங்கி விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் போலீசாருடன் சிந்தகவுண்டம்பாளையம் சென்று அண்ணாதுரை என்பவரது மகன் பாலாஜி (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போதே அவர் தப்பி ஓடிவிட்டார். இதேபோல் அவர் 3 முறையும் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிவிட்டார். இவா் மீது போதை ஊசி வாங்கி, விற்பனை செய்தது தொடா்பான மூன்று வழக்குகள் அந்தியூா் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் பாலாஜி பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் வெளியூர் செல்ல நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மும்பையில் இருந்து பாலாஜி போதை ஊசி வாங்கி வந்து விற்றதும், தனக்குத்தானே போட்டுக்கொண்டதும் உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாலாஜியை கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!