கோபியில் சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான வாலிபர் கைது

கோபியில் சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்.

கோபியில் 17 சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோபியில் 17 சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மேட்டுவலவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 31). டிரைவரான இவர், கோபி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தாயாருடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர், சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக விஸ்வநாதனனிடம் விசாரித்து உள்ளனர். சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்ற தகவலை அறிந்ததும் விஸ்வநாதன் தலைமறைவாகியுள்ளாரர். இதுகுறித்து சிறுமியின் தாய், கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விஸ்வநாதனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. கடந்த 1 மாதமாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த விஸ்வநாதனை நேற்று (27ம் தேதி) கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் கைது செய்தார். பின்னர், விஸ்வநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!