ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நாளை துவக்கம்

ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நாளை துவக்கம்
X

கண்காட்சி.

ஈரோடு பூமாலை வணிக வளாகத்தில் நாளை மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி துவக்கி 11 நாள்கள் நடக்கிறது.

ஈரோடு பூமாலை வணிக வளாகத்தில் நாளை மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி துவக்கி 11 நாள்கள் நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நாளை (ஜனவரி 10ம் தேதி) முதல் 20ம் தேதி வரை 11 நாட்கள் ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை லை வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சிப் பொருட்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய்கள், பாத்ரூம் க்ளீனர்ஸ், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளது.

நாளை முதல் துவக்கும் இக்கண்காட்சி நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings