மகளிர் உரிமைத் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டமாக 16 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு

மகளிர் உரிமைத் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டமாக 16 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு
X

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டமாக 16 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டமாக 16 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தில் விண்ணப்பத்தில் சரியான தகவல்கள் இல்லாதது, உரிய ஆவணங்கள் இணைக்கப்படாதது, வங்கி கணக்கு எண் தவறானது, உரிய முகவரி இல்லாதது என பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப் பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ததையடுத்து உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் ஈரோடு மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் 2ம் கட்ட பயனாளிகள் பட்டியலில் சேர தகுதியானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1 மட்டும் செலுத்தி வங்கி கணக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிலருக்கு போனில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக இப்பணி நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு முதல்வர் 2ம் கட்ட பயனாளிகளுக்கு இத்திட்டத்தை நாளை (நவ.10) தொடங்கி வைக்க உள்ளதையடுத்து, ஈரோடு மாவட்டத்திலும் 2ம் கட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில், 3 ஆயிரம் மகளிர்கள் நேரில் அழைக்கப்பட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!