ஈரோட்டில் மகளிர் தின விழா: ஆற்றல் அசோக் குமாருக்கு பொதுநல வேந்தன் விருது

Erode news- ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமாருக்கு பொதுநல வேந்தன் விருதினை ஈரோடு அக்னி ஸ்டில்ஸ் இயக்குனர் சின்னச்சாமி வழங்கி கௌரவித்தார்.
Erode news, Erode news today- ஈரோட்டில் சர்வதேச மகளிர் தின விழாவில் ஆற்றல் அசோக்குமாருக்கு பொதுநல வேந்தன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இதில், பல்வேறு சமூக நலப் பணிகளுக்காக ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமாருக்கு பொதுநல வேந்தன் விருதினை ஈரோடு அக்னி ஸ்டில்ஸ் இயக்குனர் சின்னச்சாமி வழங்கி கௌரவித்தார்.
விழாவில், ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன், வேளாளர் கல்லூரி செயலாளர் சந்திரசேகர், கல்லூரி முதல்வர் ஜெயந்தி, ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்வி நிறுவனர் மக்கள் ராஜன், ஈரோடு சுதா ஹாஸ்பிடல் டாக்டர் தனபாக்கியம், அன்னபாரதி மற்றும் சென்னை மீடியா சௌகத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற ஆற்றல் அசோக்குமார் பேசும்போது, சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறக்கட்டளையை துவக்கி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஊக்கப்படுத்தியதோடு பள்ளிகளை மேம்படுத்தினோம்.
சமுதாயக் கூடங்களை திறந்தோம். அனைத்து தரப்பு மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்தோம். இப்படி பல்வேறு சமூக பணிகளுக்காக பல விருதுகள் கிடைக்கப்பட்டுள்ளது. தற்போது பெற்ற பொதுநல வேந்தன் விருது எங்கள் சமுதாயப் பணிகளை மேலும் சிறப்பாக செய்திட ஊக்கப்படுத்துகிறது.
ஓட்டப்பந்தயத்தில் ஓடும் இளைஞர்களை வேகமாக ஓட செய்வதற்கு கைதட்டல் கிடைப்பது போல் பெற்ற விருதுகள் எல்லாம் பொதுமக்கள் கை தட்டல் என்று நினைக்கின்றோம். ஈரோடு மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை நற் சேவைகள் வழங்கும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu