ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்டத்தில் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சரால் கல்பனா சாவ்லா விருது-2024 வழங்கப்படவுள்ளது. எனவே 2024ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 15ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்விருது பெறுவோருக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கமும், ரூ.5 லட்சமும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்ப விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்விருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகம் 6வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலக தொலைபேசி எண் 0424-2261405ஐ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu