பவானி அருகே நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்

பவானி அருகே நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்
X

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

பவானி அருகே உள்ள குறிச்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பயனாளிகள் பணிக்கு சென்றபோது இன்று அப்பகுதியில் உள்ள 100 நபர்களுக்கு மட்டுமே வேலை உள்ளதாகவும் மற்றவர்களுக்கு வேலை இல்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தில் முறையாக குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தியவர்களுக்கு மட்டுமே பணி வழங்க முடியம் என கூறியதால், இதனை கண்டித்து 100நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பவானியில் இருந்து குறிச்சி வழியாக அந்தியூர் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் பணி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி