கொடுமுடி: வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை

கொடுமுடி: வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை
X
கொடுமுடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த, ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு அடுத்த அணைக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர். இவரது முதல் மனைவி விஜயலட்சுமி.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், விஜயலட்சுமியின் அக்கா சுலோச்சனாவை, சதாசிவம் 2-வது திருமணம் செய்து கொண்டார். சுலோச்சனா சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சுலோச்சனாவுக்கு குழந்தைகள் இல்லை.சுலோச்சனாவுக்கு கடந்த சில வருடங்கள் முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சுலோச்சனா, தங்கை விஜயலட்சுமியிடம் வயிற்றி வலி தாங்க முடியாமல் விஷத்தை குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருந்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார்.இது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது