/* */

அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு
X

Erode news- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் (மாதிரி படம்)

Erode news, Erode news today- அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூடுமைனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ராஜாமணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பள்ளியில் வேலை செய்யும் 35 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசுவதும், சைகை செய்வதுமாக இருந்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமான தகவல்களையும் அனுப்பியும், செல்போனில் தொடர்பு கொண்டும் பேசியும் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் பாலிய வள மைய மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பள்ளியில் இருந்த அந்த பெண்ணுக்கு ராஜாமணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பெண்ணின் கணவர், இதுகுறித்து தலைமையாசிரியர் ராஜமணியிடம் கேட்டு உள்ளார். அதற்கு, ராஜாமணி அந்த பெண்ணின் கணவரை சாதி பெயரை கூறி திட்டியதுடன், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் ராஜாமணி மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2024 10:15 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 2. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 3. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 5. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 6. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 7. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 8. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 9. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா