உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் பலி
பைல் படம்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் எட்வின். இவரின் மனைவி அமலி (வயது 22). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மூன்று மாதத்துக்கு முன்பு பெருந்துறை, பணிக்கம்பாளையத்துக்கு குடிவந்தனர். சிப்காட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் எட்வின் சரிவர வேலைக்கு செல்லாமல், குடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த மாதம், 30ம் தேதி இரவு, கணவனை மிரட்டுவதற்காக, அமலி தனது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டார்.
இதனையடுத்து, தீக்குச்சியை உரசி, கொழுந்து விட்டு எரிந்த நிலையில், தரையில் வீசினார். அப்போது தரையில் சிந்தியிருந்த டீசலில் பட்டு தீப்பிடித்தது. இந்த தீ அவர் உடலிலும் பற்றியது. பலத்த தீக்காயமடைந்த அவரை, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu