பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: பெண் பலி

பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: பெண் பலி
X

மரத்தில் மோதிய கார்.

பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பத்மினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் பண்ருட்டி அருகே உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு காரில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காரனது பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், பகலாயூர் பகுதியில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி, ரோட்டோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த சண்முகசுந்தரம், சுஜாதா, சுரேஷ், ஹஸ்வந்தன் ஆகியோர் தலை மற்றும் உடலில் அடிபட்ட நிலையில், பெருந்துறை தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது