சித்தோடு அருகே உடல் நலக்குறைவால் இளம்பெண் திடீரென மரணம்

சித்தோடு அருகே உடல் நலக்குறைவால் இளம்பெண் திடீரென மரணம்
X
சித்தோடு அருகே, இளம்பெண் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அஞ்சலி (வயது 36). அஞ்சலிக்கு ஒசூர் நாயக்கன்பட்டி, புரட்சிகால் கிராமம், வெங்கடராம்புரம் சொந்த ஊராகும். இவர் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

திருப்பூரில் தங்கியிருந்த போது காளப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன், திருமணமாகி 4 மாதங்கள் மட்டும் சேர்ந்து வாழ்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சித்தோடு நடுப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 3 மாதத்திற்கு முன்னர், சொந்த ஊருக்கு சென்று பின்னர் ஈரோடு வந்த அஞ்சலிக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அஞ்சலி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!