கோபிச்செட்டிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கோபிச்செட்டிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
X
டி.என்.பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே கஞ்சா விற்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.என்.பாளையம் வனச்சாலை ரோடு பகுதியை சேர்ந்த வீரம்மாள் (வயது 51) என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு