/* */

கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது
X

பைல் படம்.

Erode News, Erode Today News - கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் சஞ்சீவ் காந்தி வீதியைச் சேர்ந்தவர் வடிவு (எ) சண்முகவடிவு (வயது 60). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீசார் சண்முகவடிவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு கோபியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை சண்முகவடிவு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் சண்முகவடிவை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த 21 வயது பெண்ணையும் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும், கோபி பகுதியில் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Jun 2024 6:45 AM GMT

Related News

Latest News

 1. கலசப்பாக்கம்
  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
 2. நாமக்கல்
  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
 4. திருவண்ணாமலை
  டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
 7. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 8. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 9. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....