அந்தியூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை

அந்தியூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை
X

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

Erode Today News, Erode News, Erode Live Updates - அந்தியூர் வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட செல்லம்பாளையம் பீட், வட்டக்காடு அருகே உள்ள கிழங்குகுழி வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். அது சுமார் 20 முதல் 25 வயது உடைய ஆண் யானை என தெரியவந்தது. இதனையடுத்து, அரசு கால்நடை மருத்துவரை கொண்டு, அதே இடத்தில் உடற்கூறு பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு 5 அடி நீளமுள்ள ஒரு ஜோடி தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு வனத்துறை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,யானைக்கு சுமார் 20 முதல் 25 வயது இருக்கும் என்றும், உணவு உட்கொள்ள முடியாமல் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!