ஈரோடு மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக கனமழை

ஈரோடு மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக கனமழை
X

பைல் படம்.

தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகின்றது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், கடந்த சில மாதங்களாகவே வெயிலின் உக்கிரம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. கோடை வெயிலுக்கு இணையாக வெப்பத்தின் தாக்கம் இருந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் 3வது நாளாக நேற்றிரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் பகலில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில் திடீரென்று மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், நள்ளிரவு வரையிலும் விட்டுவிட்டு பெய்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நேற்று காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 01) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 37.00 மி.மீ ,

கோபி - 9.20 மி.மீ ,

பவானி - 32.80 மி.மீ ,

பெருந்துறை - 28.00 மி.மீ ,

நம்பியூர் - 48.00 மி.மீ ,

தாளவாடி - 3.10 மி.மீ ,

கொடுமுடி - 86.80 மி.மீ ,

மொடக்குறிச்சி - 3.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 4.20 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 1.00 மி.மீ ,

அம்மாபேட்டை - 2.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 3.40 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 11.40 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 269.90 மி.மீ , சராசரி மழைப்பொழிவு 15.88 சதவீதம் ஆகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!