ஈரோடு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஈரோடு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை
X

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் அந்தியூர் அரசு மருத்துவமனை செவிலியர் சங்கீதா, அவசரகால மருத்துவ நுட்புநர் வாசுதேவன் ஆகியோர் உள்ளனர்.

ஈரோடு அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது, வழியிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது, வழியிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மகேஷ் (வயது 36). நிறைமாத கர்ப்பிணியான மகேசுக்கு நேற்று (11ம் தேதி) பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது உறவினர்கள் அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிக்கலான பிரசவமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதனையடுத்து, மகேஸ் அந்தியூர் அரசு மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். மகேசுக்கு முதலுதவிக்காக அந்தியூர் அரசு மருத்துவமனை செவிலியர் சங்கீதா உடன் சென்றார்.

இந்நிலையில், ஈரோடு அருகே பி.பெ.அக்ரஹாரம் அருகே சென்ற போது மகேசுக்கு பிரசவ வலி அதிகமாகி குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இருந்தது‌. இதையடுத்து, ஓட்டுநர் திருமூர்த்தி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து, செவிலியர் சங்கீதா, அவசர கால மருத்துவ உதவியாளர் வாசுதேவன் ஆகியோர் மகேசுக்கு பிரசவம் பார்த்தனர்.

இரவு 11.25 மணிக்கு மகேசுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் சேயை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரவில் ஆள் அரவமற்ற பகுதியில் சமயோசிதமாக செயல்பட்டு, இரண்டு உயிர்களை காப்பாற்றி, பாதுகாத்த செவிலியர் சங்கீதா, அவசர கால மருத்துவ நுட்புணர் வாசுதேவன், ஓட்டுநர் திருமூர்த்தி ஆகியோரை ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் பாராட்டினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil