ஆசனூரில் ரீடு நிறுவனம் சார்பில் பழங்குடி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பழங்குடி மாணவர்கள் ரீடு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.
சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூரில் ரீடு நிறுவனம் சார்பில் பழங்குடி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரீடு தன்னார்வ சேவை நிறுவனம் கடந்த 23 வருடங்களாக குழந்தைகள், பெண்கள், சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள் பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆசனூரில் பழங்குடியினர் மாணவ மாணவியருக்கு பள்ளி உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆசனூர் டி.எப்.ஓ., சுதாகர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இட்டரை, தடசலட்டி, காளி திம்பம், புது தொட்டி, மாவள்ளம், தேவர் நத்தம், சோக்கி தொட்டி, கெத்தேசால் மற்றும் புதுக்காடு ஆகிய கிராமங்களில் இருந்து 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி மாணவியர்கள் உட்பட 78 பேருக்கு நோட்டு புத்தகம், சீருடை, புத்தக பை, கொடை, ஸ்வெட்டர் உள்ளிட்ட 2,31,000 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்றார்.டாம்ஸ் பாலன், மற்றும் மாதேவி, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரீடு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் திட்ட அலுவலர்கள் சிவராஜ், செல்வம்,சரவணகுமார், கிருத்திகாஸ்வரி,மற்றும் தன்னார்வலர்கள் செந்தில்குமார், செல்வம், சதீஷ்குமார், ரங்கசாமி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட அலுவலர் ரம்யா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu