பவானி சன்னியாசிபட்டி மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பவானி சன்னியாசிபட்டி மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X

Erode news- பவானி சன்னியாசிப்பட்டியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பள்ளி மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி சன்னியாசிபட்டி கிராமத்தில் இன்று (19ம் தேதி) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.48.66 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Erode news, Erode news today- பவானி சன்னியாசிபட்டி கிராமத்தில் இன்று (19ம் தேதி) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.48.66 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சன்னியாசிப்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று (19ம் தேதி) மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து, 107 பயனாளிகளுக்கு ரூ.48.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், இம்முகாமில் அவர் தெரிவித்ததாவது,

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பவானி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.


மனுநீதி நாள் முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒரு கிராமத்தில் முகாமிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதே ஆகும்.

அந்த வகையில், இன்று (19ம் தேதி) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை வேளாண்மை மற்றும் பொறியியல் துறைகள் சார்பில் என மொத்தம் 107 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 66 ஆயிரத்து 586 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்ட மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர், இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இம்முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், பவானி வட்டாட்சியர் சித்ரா, பவானி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பூங்கோதை வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சித்திரசேனன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!