கொள்கையில் தெளிவாக இருக்கின்றோம்: செங்கோட்டையன் பேட்டி

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ள வன்னி மரம் விநாயகர் கோயிலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழிபாடு நடத்தினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ள வன்னி மரம் விநாயகர் கோயில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், அதிமுகவில் இரண்டு அணிகளும் ஒன்று சேராமல் வெற்றி பெற முடியாது என்ற புகழேந்தி கேள்விக்கு, தமிழ்நாட்டில் வாக்கு இல்லாதவர்கள் கேள்விக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. புகழேந்தி தமிழ்நாட்டில் வாக்களிக்கின்ற உரிமை இல்லாதவர். அவர் கேள்விக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.
ஈரோடு தேர்தலில் நிற்கும்போது எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். ஈரோடு கிழக்குத் தொகுதியில் எவ்வளவோ இடர்பாடுகளுக்கு இடையில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக வலிமையுடன் சிறப்போடு மக்களை நேசிக்கின்ற இயக்கமாக இருக்கும்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் களத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒரு முடிவு. அதிமுகவை பொறுத்தவரை கொள்கையில் தெளிவாக இருக்கின்றோம். சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கிறது என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை எதிர்த்து அதிமுக வழக்கு தொடருமா என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்காமல் சென்றார். பேட்டியின் போது, முன்னாள் எம்பி சத்தியபாமா, கோபி முன்னாள் நகர மன்ற தலைவர் கே.கே.கந்தவேல் முருகன், கோபி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் கவுன்சிலருமான முத்துராமன் மற்றும் கோபி நகர அண்ணா திமுக அனைத்து சார்பணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu