ஈரோடு மாநகராட்சி பகுதியில் நாளை (மே.25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் நாளை (மே.25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்

குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

ஊராட்சிக்கோட்டையில் பராமரிப்பு பணி காரணமாக, ஈரோடு மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

Erode News, Erode Today News - ஊராட்சிக்கோட்டையில் பராமரிப்பு பணி காரணமாக, ஈரோடு மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பவானி அருகே உள்ள வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், ஈரோடு மாநகரில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் 25ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே பணி நடைபெறும் சனிக்கிழமை ஒரு நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. இந்த அசவுகரிய நிலையை ஈரோடு மாநகராட்சி பொதுமக்கள் பொறுத்துக்கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story