பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,700 கன அடி நீர் திறப்பு!

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,700 கன அடி நீர் திறப்பு!
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடி யாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணை நீர்பிடிப்பு பகுதியில் ஒரு வாரமாக மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 81 அடியாக அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதனிடையே, நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. புதன்கிழமை (நவ.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி 593 கன அடி நீர் வரத்தானது.

அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 81.42 அடியாகவும், நீர் இருப்பு 16.45 டிஎம்சியாகவும் இருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!