பவானிசாகர் அணை நீர்மட்டம் 53.98 அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 53.98 அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (மே.28) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.98 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (மே.28) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.98 அடியாக உயர்ந்தது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்ட பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இதுதவிர, ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனிடையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை (மே.28) இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53.98 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 989 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 5.45 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!