பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.17 அடியாக சரிவு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.17 அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 87.17 அடியாக சரிந்தது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி 5 சுற்றுக்களாக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

தற்போது, கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 800 கன அடி தண்ணீரும் என மொத்தம் 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று (ஏப்.,09) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 87.17 அடி ,

நீர் இருப்பு - 19.79 டிஎம்சி ,

தற்போதைய நீர் வரத்து வினாடிக்கு - 429 கன‌ அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,800 கன‌ அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன‌ அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 600 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடி நீரும் என் மொத்தம் 2,800 கன‌ அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story