பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணை (பைல் படம்).
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி 5 சுற்றுக்களாக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, நான்காம் சுற்றுக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, , ஐந்தாவது சுற்றுக்கான தண்ணீர் பத்து நாள்கள் கழித்து திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஏப்.,10) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 87.1 அடி ,
நீர் இருப்பு - 19.61 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 1,326 கன அடி ,
நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,
காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடி நீரும் என் மொத்தம் 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu