75.62 அடியாக சரிந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

75.62 அடியாக சரிந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (செப்.,13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 75.62 அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (செப்.,13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 75.62 அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 75 அடியாக குறைந்தது.

இன்று (செப்டம்பர் 13) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 75.62 அடி ,

நீர் இருப்பு - 13.47 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,512 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,900 கன‌ அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா