பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைவு
X

கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று காலை 17,916 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 14,901 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

சனிக்கிழமை (டிச.9) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 82.65 அடி ,

நீர் இருப்பு - 17.13 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 14,901 ,

நீர் வெளியேற்றம் - 2,400 கன‌ அடி ,

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 300 கன அடி தண்ணீர் என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 5.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!