பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,789 கன அடியாக அதிகரிப்பு..!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,789 கன அடியாக அதிகரிப்பு..!
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஜூன்.25) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 412 கன அடியிலிருந்து 1,789 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஜூன்.25) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 412 கன அடியிலிருந்து 1,789 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும், மோயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், இந்த அணை 3 மாவட்டங்களின் முக்கிய பாசன தேவையாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.24) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 412 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.25) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,789 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.41 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 58.63 அடியாக உயர்ந்துள்ளது. அப்போது, அணையில் நீர் இருப்பு 6.82 டிஎம்சியாக இருந்தது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு