பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 800 கன அடி

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 800 கன அடி
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (ஜன.3) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 816 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (ஜன.3) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 816 கன அடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 669 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 816 கன அடியாக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை (ஜன.3) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 82.52 அடி ,

நீர் இருப்பு - 17.05 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 816 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,

பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!