/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு
X

கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று (சனிக்கிழமை) காலை அணைக்கு நீர்வரத்து 14,901 கன அடியாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9,443 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 82.65 அடியிலிருந்து 83.28 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.48 டிஎம்சியாக உள்ளது. மேலும், அணை பகுதியில் 36 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Updated On: 10 Dec 2023 4:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!