பெருந்துறையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொல்லை: வார்டு செக்யூரிட்டி கைது..!

பெருந்துறையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொல்லை: வார்டு செக்யூரிட்டி கைது..!
X

வார்டு செக்யூரிட்டி கைது (பைல் படம்).

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார்.

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 33 வயது போலீஸ் ஏட்டு பணிபுரிகிறார். காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில், மேட்டூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தற்போது அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பாதுகாப்புப் பணியில் பெண் போலீஸ் ஏட்டு மற்றும் கருமலைக்கூடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ஆகியோர் இருந்தனர். இந்தநிலையில், பெண் போலீஸ் ஏட்டுவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், நேற்று அதிகாலை, ஓய்வெடுக்க மகப்பேறு பிரிவில் படுத்திருந்திருந்தார்.

அப்போது, காசநோய் வார்டில் செக்யூரிட்டியாக பணியில் இருந்த பெருந்துறை அடுத்த பெரியமடத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) வார்டில் நுழைந்து ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து உடனே பெண் போலீஸ் ஏட்டு பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்திய போலீசார், மோகன்ராஜை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai powered agriculture