/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சித்தோட்டில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பு
X

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சித்தோட்டில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் தலைமை வாக்குசாவடி அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை (விவிபேட், பேலட், கன்ட்ரோல் யூனிட்) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளரின் பிரதிநிதி முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர்.

இதையடுத்து தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட 20 மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியினை பெற்று, அனுமதிக்கப்பட்ட ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றி துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் மற்றும் பிற மாநில போலீசார் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையொட்டி, முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6 சட்டமன்ற தொகுகளின் வாக்கு பெட்டிகள் வைக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவு 8 மணிக்கு பிறகு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர துவங்கின. இதையடுத்து பாதுகாப்பு அறையில் சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று இரவு முதலே மத்திய போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க வாக்கு எண்ணிக்கை மையத்தின் வளாகத்தில் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பாதுகாப்பு பணி வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் மாதம் 4ம் தேதி வரை தொடரும். தொடர்ந்து தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 20 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!