ஈரோட்டில் காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு

ஈரோட்டில் காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு
X

Erode news -100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காய்கறிகளை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Erode news- நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Erode news, Erode news today- நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காய்கறிகளை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம்தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாசலில் பொதுமக்களின் பார்வையில் படுமாறு தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட், அவரைக்காய், முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளை பயன்படுத்தி தேர்தல் நாள் 19-4-2024 என எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த விழிப்புணர்வு மாதிரியின் முன்பாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நின்று, ஒற்றை விரலை உயர்த்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story
ai solutions for small business