ஈரோட்டில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான எச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதனை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கல்லூரி மாணவியர்கள் "வாக்களிப்பது ஜனநாயக கடமை", "வாக்களிப்போம், வாக்களிப்போம்", "பாரதத்தின் பெருமை ஓட்டுரிமை" உள்ளிட்ட 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர பொறியாளர் விஜயகுமார், பொறுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, ஒருங்கிணைப்பாளர் (பள்ளிக்கல்வித்துறை) கீதா உட்பட கல்லூரி மாணவியர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu