ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதி மீறல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதி மீறல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு
X

வழக்குப் பதிவு (பைல் படம்).

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக டாக்டர் கார்மேகன் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர்.

அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனால், அறிவுறுத்தலை மீறியும் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்மேகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!