பெருந்துறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

பெருந்துறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

நிச்சாம்பாளையம் அருகே உள்ள பிரப்நகர் பேருந்து நிறுத்தத்தில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பிரப்நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகம் சீரான குடிநீர் வழங்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திங்களூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!