கோபிசெட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
X

Erode news- கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode Today News, Erode News, Erode Live Updates - கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலுவையில் உள்ள செலவினத் தொகை மற்றும் பயிர் கணக்கெடுப்பு பணிக்கான உபகரணங்களை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது ஈரோடு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கருப்பு பட்டைகளை அணிந்தபடி கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோபி வட்டார சங்க செயலாளர் சரவணக்குமார் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!