பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை
பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.
2022-2023ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் இதர மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழகத் கோயில்களில் இருந்து இதர மாநிலத் கோயில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலிலிருந்து மூன்றாம் ஆண்டாக இன்று (16ம் தேதி) மதியம் கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை செய்வதற்கு பட்டுப்புடவை, மலர்மாலைகள், மஞ்சள். குங்குமம், பழங்கள். பூஜை பொருட்கள் உட்பட கொண்டு செல்லப்பட்டது.
சாமுண்டீஸ்வரி அம்மன் ஜென்ம நட்சத்திரமான ரேவதி நட்சத்திர தினமான நாளை (17ம் தேதி) வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் கால பூஜையின்போது சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வஸ்திர மரியாதை சாத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோயிலின் துணை ஆணையரும், செயல் அலுவலருமான மேனகா, கோயில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், பூங்கொடி, திருக்கோயில் கண்காணிப்பாளர் பாலசுந்தரி, கோயில் பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu