முழு கொள்ளளவை எட்டியது அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை

முழு கொள்ளளவை எட்டியது அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை
X

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறி வருகிறது.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறி வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 2 மலைகளுக்கு இடையே வரட்டுப்பள்ளம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடியாகும். பர்கூர் மலைப்பகுதிகளில் மழை பொழியும்போதெல்லாம் அந்த தண்ணீர் காட்டாறு, ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து சேரும்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், முழு கொள்ளளவான, 33.46 அடியில் வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) 32.05 அடியை எட்டியது. எந்த நேரத்திலும் அணை நிரம்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை (டிச.9) இன்று காலை 6.45 மணியளவில் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து உபரி நீர் 23.60 கன அடி வெளியேறி வருகிறது.

மேலும், அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரி மற்றும் அந்தியூர் பெரிய ஏரிக்கு செல்கிறது. கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி என ஐந்திலும் தற்போது நீர் இருப்பு உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் பர்கூர் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், ஐந்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!