பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து

பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து
X

விபத்திற்குள்ளான வேன்.

பெருந்துறை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி பள்ளத்தில் இறங்கியதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஈரோட்டில் இருந்து பெருந்துறைக்கு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. வேனை சிவகிரியை சேர்ந்த கொற்றைவேல் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். பெருந்துறை அடுத்த வண்ணாங்காட்டுவலசு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த ஒரு மரத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் இறங்யது.

இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்து டிரைவரால் வெளியே வர முடியாமல் தவித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வேனின் முன்பகுதி கயிறு கட்டி இழுத்து டிரைவரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!